Thursday, August 11, 2011

2076 இந்து கோயில்களை சிங்கள வெறியர்கள் இடித்து அழித்தார்கள்

ஒருகாலத்தில் தமிழீழத்தில் சிவ தலங்களில் தேவாரம் ஒலித்துக்கொண்டே இருக்கும். திருவிழாக் காலங்களில் இசை நிகழ்ச்சி & பரத நாட்டியம் & காவடி ஆட்டம் & கும்மி & கரகம் நடக்கும். மங்கல இசைக் கருவி நாகசுரம் இசைக்கும் & தவில் முழங்கும். அம்மன் கோயில்களில் உடுக்கை இசை எழும். பண்டைத் தமிழிசைக் கரு வியான பறை ஒலிக்கும். நாட்டுக் கூத்து விடிய விடிய நடக்கும். தேர்த் திருவிழாவில் அழகிய சிற்பத்தேர் தெரு உலா வரும்.

இன்று... சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு தமிழர்களின் இந்த சிவத் தலங்களும் தப்பவில்லை.


இலங்கைத் தீவில் கி.மு.1000இல் ஐம்பெரும் சிவன் கோயில்கள் இருந்தன என்பது வரலாறு.


திருக்கோணமலை கோணேசுவரமும் - மன்னார் திருக்கேதீசுவரமும் - கீரிமலை நகுலேசுவரமும் - சிலாபம் முனீசுவரமும் - தேவன்துறை சந்திர மவுலீசுவரமும் தமிழர்களின் சைவத் திருத்தலங்களாகத் திகழ்ந்தன.


தெற்கிலங்கையில் தேவன் துறையில் அமைந்த சந்திர மவுலீசுவரமும் - மாகாணப் பிரிவினையின் போது சிங்களவர் கையில் வீழ்ந்த சிலாபம் முனீசுவரமும் தமிழீழத்துக்கு வெளியே பறிபோயிற்று.


தமிழீழத்தின் தலைநகரான திருக்கோண மலையில் சம்பந்தரால் பாடப்பட்ட கோணேசுவரம் இன்று சிங்கள இனவெறியர்களால் சூழப்பட்ட தலமாக இருக்கிறது. இக்கோயில் அமைந்த மான்கள் விளையாடும் கோணமலைக் குன்றில், வானை முட்டும் புத்தர்சிலை ஒன்றை நிறுவித் தமிழர்களை வம்புக்கு இழுத்திருக்கிறார்கள் சிங்களவர்கள்.


மன்னாரில் - சுந்தரரால் பாடப்பட்ட திருக்கேசுவரம் கோயில் காணியில் மக்கள் எதிர்ப்பையும் மீறி முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு - ‘மகாதித்த விகாரை’ என்னும் மிகப் பெரிய புத்தர் கோயில் எழுப்பப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.


சிறப்பு மிக்க நகுலேசுவரம் அமைந்த கீரிமலை ஊரின் பெயர்கூடச் சிங்களப் பெயராய் மாற்றப்பட்டிருப்பதாகச் செய்தி.


பண்டைக் காலத்தில் அனுராதபுரத்தில் அமைந்திருந்த சிவன்கோயில் ஒன்றை அழித்து - அதன்மேல் எழுப்பப்பட்டதே ‘அபயகிரி விகாரை’ என்னும் புத்தர் கோயில் என்று, மலல சேகர - அரிச்சந்திர ஆகிய சிங்கள வரலாற்றாளர்களே பதிவு செய்திருக்கிறார்கள்.

கதிர்காமம் அது தமிழர் ஊர் என்பதை ‘கதிர்காமம்’ என்னும் தூய தமிழ்ப்பெயரே உறுதி செய்யும். காலம் காலமாகத் தமிழர் வழிபட்டு வந்த முருகன் கோயில் தலமான கதிர்காமம் இன்று தமிழர் கையில் இல்லை.

சிவ மதத்துக்கு எதிரான நெடுங்கால சிங்கள -புத்த அழிவு நடவடிக்கைகளில் சில இவை.

தமிழீழத்தில் - தெய்வ வழிபாட்டு இடங்களாக மட்டும் அல்ல - தமிழ்மொழி - தமிழ்க் கலைகள் - தமிழ்ப் பண்பாடு காப்பகங்களாகவும் சிவ தலங்கள் திகழ்கின்றன. இதன் காரணமாகவே இக் கோயில்கள் சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு இலக்காவதைப் பார்க்கிறோம்.


தமிழீழத்தில் 24.12.2003 வரை சிங்கள வான்படை நடத்திய குண்டு வீச்சில் 2076சைவக் கோயில்கள் உடைத்துத் தகர்த்து நொறுக்கப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


அயோத்தியில் ஒரு இராமர் கோயிலை அழித்தார்கள் என ஓங்கி முழக்கமிடும் இந்தியாவின் சிவ மதத்தினர், தமிழீழத்தில் 2076 சைவக் கோயில்களை சிங்கள - புத்த வெறியர்கள் இடித்து - உடைத்து அழித்துக் கொட்டியிருக்கிறார்களே - அமைதி காப்பது ஏன்?


முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு - தமிழீழத்தின் மூலை முடுக்குகள் எங்கும் - புதிது புதிதாய் புத்தர் கோயில்கள் தழைக்கத் தொடங்கி உள்ளன.


புலிகளின் தலைமையகமாகத் திகழ்ந்த கிளிநொச்சியில் புத்த விகாரை ஒன்று புதிதாக முளைத்திருக்கிறது.


செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எழுப்பினான் என்பது வரலாற்றுச் செய்தி.சேரநாட்டு எல்லையில் அவன் எழுப்பிய மங்களாதேவி கோயிலைத் தவிர - தமிழ்நாட்டில் கண்ணகிக்கு எந்த ஊரிலுமே கோயில்கள் இல்லை.


ஆனால் - தமிழீழத்தில் ஊர்தோறும் கண்ணகிக்குத் தமிழர்கள் கோயில் எழுப்பி இருக்கிறார்கள்.


1999இல் தமிழீழத்தில் - புங்குடுதீவு கண்ணகி கோயில் குருக்களின் மனைவி சாரதாம்பாளை சிங்களப்படை வெறியர்கள் - ‘கற்பரசி’ கண்ணகி கோயிலிலேயே கற்பழித்துப் பிணமாகப் போட்டார்கள்.


தமிழர்களின் கோயிலில் நிகழ்ந்த சிங்கள இனவெறிப் படுகொலை ஒன்றுதான் பிரபாகரனை தமிழீழ விடுதலைக் களத்தில் ஆயுதப் போராளி ஆக்கியது.


பிரபாகரனே சொல்கிறார்.


‘‘கொழும்புக்குப் பக்கத்தில் பாணன்துறை சைவக் கோயில் ஒன்றில் - 1958-இல் சிங்கள இனவெறியர்கள் ஒரு தமிழ்க் குருக்களை நெருப்பு மூட்டி உயிரோடு துடிக்கத் து டிக்க எரித்துக் கொன்றார்கள். ‘நான் சின்னஞ் சிறுவனாக இருந்தபோது - எங்கள் வீட்டில் - அடிக்கடி என் பெற்றோர் அந்தக் கொடுமை பற்றி மனம் நொந்து பேசக் கேட்டிருக்கிறேன். நான் ஆயுதம் ஏந்த அந்த நிகழ்வும் ஒரு காரணம் ஆயிற்று’ என்கிறார் பிரபாகரன்.


அறம் கொல்லும் சிங்கள - புத்த இனவெறி என்னதான் வலிமைமிக்கதாக இருந்தாலும் - தமிழீழத் தேசிய இனம் பணியாது - தமிழீழ விடுதலைப்போர் தணியாது என் பதில் ஐயமில்லை.


விடுதலைக்கான தேவை இருக்கும் வரை -விடுதலைக்கான போராட்டமும் இருக்கும்.

- குமுதம் 

thanks to http://www.yarl.com/forum3/index.php?showtopic=90169

Monday, August 8, 2011

போருக்கு பின் -10 தமிழ் படித்த புத்தர் ---தமிழை அழிக்கும் சிங்களர் -காசி ஆனந்தன்

தமிழீழ மண்ணின் ஊர்ப் பெயர்கள் & தெருப் பெயர்கள் & வணிக நிலையப் பெயர்கள் அனைத்தும் பிரபாகரன் காலத்தில் தனித் தமிழ்ப் பெயர்களாய் தகதகத்தன.

இன்று -தமிழீழத்தின் அனைத்து தமிழ்ப் பள்ளிக் கூடங்களுக்கும் மீண்டும் சிங்கள ஆசிரியர்கள் அனுப்பப்படுவதாக சினமூட்டும் செய்திகள் வெளிவருகின்றன.

தமிழீழத் தேசிய இனத்தின் முதன்மை உயிர்க் கூறான தாய் மொழியாம் தமிழ்மொழி,சிங்கள இனவெறி அரசால் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டிருக்கிறது.

ஒரு பொருள் இன்னொரு பொருளோடு நெருக்கமாக இயையும் போதில் - கல்லோடு கல் உரசுதல் -வெப்பக் கருத்தும் ஒளிக் கருத்தும் தோன்றுகின்றன என்றும் - ‘இலங்குதல்’ என்னும் ஒளி குறித்த தமிழ்ச் சொல் இப்படித்தான் தோன்றிற்று என்றும் மொழி இயலாளர்கள் சொல்கிறார்கள்.

இலங்குதல் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதே ‘இலங்கை’ என்னும் சொல்லாகும்.இச் சொல்லையே சிங்களர்கள் ‘லங்கா’ ஆக்கினார்கள்.

சிங்களவன் இன்று சிங்கள நாடு என்று பெருமையோடு மார்தட்டி உடல் சிலிர்க்கும் - அவன் மண்ணின் பெயர் கூட - சிறீலங்கா - சிங்கள மொழி அல்ல - தமிழேயா கும்.

சிங்கள மொழியில் 50 விழுக்காடு தமிழ்ச் சொற்கள் இருப்பதாக சிங்கள மொழி ஆய்வாளர்களே கூறுகிறார்கள்.சிங்களத்துக்குச் சொல் தந்த தமிழையே சிங்களம் அழிக்கிறது.

கி.மு. 3-ம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட சங்க காலத்தில் தமிழீழத்தில் இருந்து ஈழத்துப் பூதன் தேவனார் என்னும் புலவர் தமிழ்நாடு வந்து தமிழ் பாடினார். இக் காலத்தில் சிங்களப் புலவன் எவனும் உலகில் இல்லை. ஏனெனில், சிங்கள மொழியே அன்று இல்லை.
கி.மு. 6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தர் தமிழ் படித்தார் என்று ‘லலிதா விஸ்தாரம்’ என்னும் வடமொழி நூல் கூறுகிறது. புத்தர் சிங்களம் படித்தார் என்று எந்தச் செய்தியும் இல்லை. ஏனெனில், புத்தர் காலத்தில் சிங்கள மொழி இல்லவே இல்லை.

புத்த மதத்தை நெறியாக அல்ல -வெறியாகக் கொண்ட இலங்கை அரசுதான் இன்று புத்தர் படித்த தமிழுக்குப் பாடை கட்டிக் கொண்டிருக்கிறது.

நீண்ட நெடுங்காலமாக இலங்கையில் இருந்த தமிழ் ஊர்ப் பெயர்களை மாற்றி - சிங்களப் பெயர்கள் சூட்டி - தமிழ் மொழி அழிப்பிலும் - தமிழர் நிலப் பறிப்பிலும் ஈடுப ட்டு வருகிறது சிங்கள அரசு.

தேவன் துறை - ‘தொந்தறை’ ஆகியது. மாத்துறை - ‘மாத்தறை’ ஆகியது.
இப்படி தமிழ்ப் பெயர்கள் அழிக்கப்பட்ட ஊர்கள் பல - மிகப் பல.

1956-ல் அன்று தலைமை அமைச்சராக இருந்த பண்டாரநாயகா இலங்கை நாடாளுமன்றத்தில் ‘தனிச் சிங்களச் சட்டத்தை’(only Sinhalar act) நிறைவேற்றினார்.

சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே அரசுப் பணி வழங்கப்படும் என்று அறிவித்தது சிங்கள அரசு.

தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு சிங்கள ஆசிரியர்கள் அனுப்பப்பட்டார்கள். தனிச் சிங்களப் பள்ளிக்கூடங்கள் கூட தமிழீழத்தில் திறக்கப்பட்டன. இதற்கு முட்டுக்கட்டை போட்டார் பிரபாகரன்.

பிரபாகரன் ஆயுதத்தோடு களத்தில் நின்ற 33 ஆண்டுகள்தான் தமிழ்மொழி சிங்கள ஆட்சியாளரின் இனவெறிப் பிடியில் இருந்து தப்பிப் பிழைத்தது.
முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு மீண்டும் பெயர் மாற்றி மகிழ்கிறார்கள். மல்லாகம் - ‘மளலகம’ ஆகியிருக்கிறது. புங்டுதீவு- ‘புவன்குடீப’ ஆகியிருக்கிறது...

ஒரு தேசிய இனத்தின் உயிர்க் கூறுகளான - மொழி - தாயகம் - மக்கள் - இம்மூன்றும் உடைந்து நொறுங்கி தமிழீழத் திருநிலம் ஒடுங்கி நிற்கிறது.



- குமுதம்
thanks to http://www.yarl.com/forum3/index.php?showtopic=90042

Tuesday, August 2, 2011

தேர்தலில் தமிழக மக்கள் பாடம் கற்பித்தும் இந்திய அரசு திருந்தவில்லை-பழ. நெடுமாறன்

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு நல்ல பாடம் கற்பித்தும்கூட இந்திய அரசு திருந்தவில்லை. இதனால்தான் இலங்கை எம்.பிக்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்துள்ளது மத்திய அரசு. இந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்று தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய அரசின் அழைப்பின் பேரில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்சே தலைமையில் வந்துள்ள குழுவினருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டம் தொடங்கும் வேளையில் இலங்கை நாடாளுமன்றக் குழு வந்திருப்பது திட்டமிட்ட ஒன்றாகும். சில நாட்களுக்கு முன்னால் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் கொழும்பு சென்று ராஜபக்சேவை சந்தித்துப் பேசியதின் விளைவாகவே இக்குழு அனுப்பப்பட்டுள்ளது.

மழைக்காலக் கூட்டத் தொடரில் ஈழத் தமிழர் பிரச்சனை உறுதியாக எழுப்பப்படும் என்ற காரணத்தினால் எதிர்க்கட்சிகளைத் திசைத் திருப்புவதற்கு இலங்கைக் குழுவை இந்திய அரசு திட்டமிட்டு வரவழைத்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக மக்களின் மன உணர்வுகளை மேலும் மேலும் அவமதிக்கும் வகையில் இந்திய அரசு ராஜபக்சே குழுவுடன் கைகோர்த்து நிற்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு நல்ல பாடம் கற்பித்தும்கூட இந்திய அரசு திருந்தவில்லை. தமிழக மக்கள் இந்த துரோகத்தை ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என எச்சரிக்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

thanks tohttp://thatstamil.oneindia.in/news/2011/08/02/neduamaran-accuses-centre-distracting-tamils-issue-aid0128.html

Saturday, July 30, 2011

போருக்கு பின் -9 வன்னியில் எஞ்சியிருந்த இரும்புகளும் தென்னிலங்கைக்கு

30 July, 2011 by admin
வன்னிப் போரில் அழிவடைந்த சொத்துக்களில் எஞ்சியிருக்கும் இரும்புகளையும் முழுமையாக வன்னியில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் பாதுகாப்பு அமைச்சு ஈடுபட்டிருக்கின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள்குடியேற்றம் இடம்பெறாத பகுதிகளில் இருந்து நாள் தோறும் ஆறு தொடக்கம் பத்து வரையான கனரக வாகனங்களில இரும்புப் பொருட்கள் ஏற்றப்பட்டு தென்பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந் நடவடிக்கையில் சிங்களவர்களும், முஸ்லிம்களும் ஈடுபட்டுவருகின்றனர்.

வீடுகளின் கதவுகள், கேற்றுக்கள், வாகனங்கள், தளபாடங்கள் உட்பட்ட வீடுகளில் காணப்படும் அனைத்து இரும்புப் பொருட்களும் ஏற்றப்படுவதாகவும் பெரிய அளவிலான இரும்புப் பொருட்களை துண்டுகளாக்குவதற்கான இயந்திர சாதனங்கள் தென்னிலங்கையில் இருந்து கொண்டுவந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக அரச அதிகாரி ஒருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இவ்வாறு ஏற்றப்படும் நடவடிக்கை பாதுகாப்பு அமைச்சின் பணிப்பின் கீழேயே முன்னெடுக்கப்படுவதாகவும், கேள்வி கோரல் அடிப்படையில் இந்த நடவடிக்கைகளை ஒப்பந்தகாரர்களிடம் பாதுகாப்பு அமைச்சு வழங்கியிருப்பதாக குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

வன்னியில் இருந்து இரும்புப் பொருட்களை அகற்றவேண்டும் என்ற பணிப்புரைக்கு அமையவே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொருட்களை ஏற்றுவோர் தெரிவிப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு கள்ளப்பாட்டினைச் செர்ந்த சம்மாட்டியார் அந்தோனி கிறிஸ்தோப்பர் கருத்துத் தெரிவிக்கையில்,

போரினால் உயிர்களையும், உடைமைகளையும் இழந்த நாங்கள் இறுதியாக கைப்பைகளுடனேயே எமது ஊர்களை விட்டு இடம்பெயர்ந்தோம். மீண்டும் நாங்கள் திரும்பி வருகின்ற போது எமது வீடுகளில் இரும்புகளாவது இருக்கும் என்ற நம்கை இருந்தது. ஆனால் தற்போது எமது சொத்துக்கள் என்று நினைவிற்கு வைத்திருக்க ஒரு இரும்புத் துண்டு கூட இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

முன்னரும் இவ்வாறான நடவடிக்கைகள் விசுவமடு, தர்மபுரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட போது கூட்டமைப்பினரின் தலையீட்டினை அடுத்து அவை தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. தற்போதும் இராணுவக் காவலரண்களுக்கு முன்பாக இரும்பு, அலுமினியப் பொருட்களை ஏற்றிச் செல்லத் தடை என விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

thanks to http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=321 

இந்திய தூதரக அதிகாரிகள் உதவி செய்வதில்லை


JULY 30, சென்னை:  நல்ல வேலை கிடைக்கும், கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்று மலேசியா சென்றவர்கள் ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டு, முறையான ஆவணங்கள் இல்லாததால் மலேசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலர் நோய் வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்று மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ள தமிழர்கள் தெரிவித்தனர். காரைக்குடியை அடுத்த நடுவிக்குளத்தைச் சேர்ந்த சின்னசாமி (31) கூறியதாவது: நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதால் மலேசியா செல்ல முடிவு செய்தேன். அப்போது பரமக்குடியை சேர்ந்த ஏஜென்ட் சரவணன், மலேசியாவில் ஓட்டல் வேலை உள்ளது என்றார். அவர் சொன்னபடி 85 ஆயிரம் பணத்தை கட்டினேன்.

அவர் மலேசியா செல்ல விசா, தங்கி வேலை செய்ய பர்மிட் ஆகியவை வாங்கி அனுப்பினார். ஆனால் அங்கு போனால் கோல்ப் மைதானத்தில் புல் வெட்டும் வேலை. சம்பளமும் சொன்னபடியில்லை. அங்கு அறிமுகமான வர்களின் உதவியால் ஓட்டல் வேலைக்கு சென்றேன். பர்மிட் முடிவதற்குள் புதுப்பிக்க ஏஜென்ட் சரவணனை தேடினால் கிடைக்க வில்லை. அதனால் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் கிளந்தான் மாநிலத்தில் உள்ள தனமேரா முகாமில் அடைத்தனர். அங்கு என்னைபோல் 250 பேர் இருந்தனர். அங்கிருந்து நெகிரிசெம்புலானில் உள்ள லிங்கி முகாமுக்கு மாற்றினர். அங்கு 1075 பேர். கடைசியாக கோலாலம்பூரில் உள்ள முகாமுக்கு கொண்டு வந்தனர். அங்கும் 1075 பேர் இருந்தனர். மூன்று முகாம்களில் ஆண்களின் எண்ணிக்கைதான் இது. பெண்களுக்கு தனி முகாம் உள்ளது. முகாமில் உள்ளவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் தமிழர்கள். முகாமில் சாப்பாடு தான் பிரச்னை. சரியான உணவில்லாமல் நோயுற்று அடிக்கடி யாராவது இறப்பார்கள்.

மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினோம். அவர்கள் கண்டு கொள்ளவில்லை அதன் பிறகு மலேசிய குளோபல் அமைப்பை நடத்தும் கமலநாதன் என்பவருக்கு வேண்டுகோள் விடுத்தோம். அவர் எங்களை தமிழகத்துக்கு அனுப்பி வைத்தார். தமிழகத்தில் உள்ள மீட்பு அமைப்பும், கட்டட தொழிலாளர்கள் சங்கமும் உதவின. மீட்க வேண்டியவர்கள் அங்கு நூற்றுக்கணக்கில் உள்ளனர். இனி வெளிநாடு செல்பவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவரைப்போலவே மயிலாடுதுறை அருகே உள்ள தேரெழுந்தூரைச் சேர்ந்த ஜுபைர் அலி (38), ஓட்டல் வேலை என்று சொல்லி மலேசியா அனுப்பப்பட்டார். அவருக்கும் அங்கு புல் வெட்டும் வேலைதான். இவரும் சிறை தண்டனை அனுபவித்து விட்டு மூன்று முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டார். இவரிடமிருந்தும் 800 வெள்ளி பணம், ஒரு செல்போனை போலீசார் வாங்கிக் கொண்டு திரும்ப தரவில்லை.

கண்டுகொள்ளாத தூதரகம்: மலேசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் முறையிட்டால் கண்டு கொள்வதில்லை. பர்மிட்டை புதுப்பிப்பதற்கு வாய்ப்பில்லாததால், இந்திய தூதகரத்தை தஞ்சம் அடைந்தால் அவர்கள் விரட்டி விட்டு விடுகிறார்களாம். முகாமில் இருந்து கடிதம் எழுதினாலும், பதில் வருவதில்லையாம். மலேசியாவில் 48 வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ளனவாம்.

இவற்றில் 47 நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள், மாதத்திற்கு ஒருமுறை முகாம்களுக்கு வந்து தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடி உதவி செய்கின்றனர். ஆனால் ஓரே ஒரு நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் மட்டும் முகாம் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. அது இந்திய தூதரக அதிகாரிகள்தான். இத்தனைக்கும் முகாம்களில் தமிழர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்கின்றனர் மீட்பு அமைப்பு நிர்வாகிகள் சேரன், சிவசோமசுந்தரம்.
thanks to http://www.sinthikkavum.net/2011/07/blog-post_541.html

Friday, July 29, 2011

போருக்கு பின் -8 செய்தி இணையங்கள் தொடர்பாக புது விதிமுறை

இலங்கையிலிருந்து பிரசூரமாகும் செய்தி இணைய தளங்கள் தொடர்பில் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இலங்கை ஊடக முறைப்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் இயங்கி வரும் இணைய செய்தி ஊடகங்கள் எவ்வாறு எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என்பது குறித்து புதிய ஒழுக்க விதிகள் தயாரிக்கப்பட உள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. செய்தி இணைய தளங்களுக்கு பொதுவான ஒழுக்க விதிகளை அறிமுகம் செய்வது குறித்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆங்கில மொழி முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பானர் சுகுமார் ரொக்வுட் தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைத் திட்டம் ஆரம்ப நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகை ஆசிரியர் பேரவையினால் பின்பற்றப்படும் ஒழுக்க விதிகள் இணைய ஊடகங்களுக்கும் பொருந்தும் எனவும், சில விடயங்களில் மட்டும் மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

thanks to http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=303

போருக்கு பின் - 7 இலங்கை ராணுவத்தின் 58 வது பிரிவில் கடமையாற்றிய உயரதிகாரியான பெனான்டொ

இலங்கை ராணுவத்தின் 58 வது பிரிவில் கடமையாற்றிய உயரதிகாரியான பெனான்டொ ஏன்பவர் தறோது ஒரு வெளிநட்டில் சரணடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிற்து. 

இறுதி நேர்த்தில் நடந்த பொரில் இரணுவம் செய்த அட்டூளியங்களை அவர் புட்டுப் புட்டு வைக்கிறர். இரணுவ தேசிய அடையள அட்டையோடு தன்னை இரூபிக்கும் அவர், சமீபத்தில் சனல் 4 தொலைக்கட்சிக்கு முகம் மறைக்கப்பட்ட நிலையில் நேர்கணல் ஒன்றையும் வழங்கியிருந்தார். 

காயப்பட்டு வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்கள் பலரை இலங்கை இராணுவம் கற்பழித்ததாக அவர் தெரிவித்துள்ளார். தான் சொந்தக் கண்களால் கண்டதாகக் கூறும் இவர் புதுமாத்தளான் பிடிபடும்போது அன்றய தினம் மட்டும் சுமார் 1,500 பொதுமக்கள் இறந்ததாகத் தெரிவித்தார்.

போரில் ஈடுபட்ட 58 வது படைப்பிரிவில் உள்ள படையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்ததாகவும், பெண்களைக் கெடுத்து வல்லுறவில் ஈடுப்ட்டது மட்டுமல்லது, அவர்களின் மார்பகங்களை வெட்டி எறிந்ததாகவும், பல சிறுவர்களைச் சுட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். காட்டு மிராண்டிகள் பொலச் செயல்பட்ட இவர்கள் காணும் இடத்தில் பெற்றொர்களுக்கு முன்னர் அவர்களின் பிள்ளைகளிக் கற்பழித்ததாகவும் தெரிவித்துள்ளர். பல இடங்களில் கணப்பட்ட உடலங்களில் தலை துண்டிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கான சரியான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பல நூற்றுக்கணக்கான உடலங்கள் தலையின்றி முண்டமாக நிலத்தில் கிடந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இறுதியாகப் புலிகள் 1 கிலேமீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டவேளை, 58 வது படைபிரிவின் கட்டளைத் தளபதி ஷர்வேந்திர சில்வாவுடன் தொடர்புகோண்ட கோத்தபாய, அந்தச் சின்னத் துண்டு இடத்தைப் பிடிக்க என்னவேண்டும் என்றாலும் செய்யுங்கள் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சரணடையும் புலிகளின் உறுப்பினர்களில் எவர் எவரை இராணுவம் சுடவேண்டும் என்பதன் பட்டியல் கூட கோத்தபாயவால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிற்து. புலிகளின் சில சிரேஷ்ட தலைவர்களின் புதுத் தோற்றப் படங்களும் 58 வது படைப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. போரில் சுமார் 50,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த பொனான்டோ என்ற அதிகாரி, பலரது உடலங்களை அடகம் செய்ய முடியாத இராணுவத்தினர், அதன் மேல் மண்போட்டு மூடியதாகவும் தெரிவித்தார்.

பிணங்களை அப்படியே நிலத்தில்போட்டு, அதன்மேல் புள்டோசர் கொண்டு மண்னை வாரி, அணைபோலப் போட்டு மூடியதாகவும் தெரிவித்த அவர், அவ்விடமே பிண வாடையோடு இருந்தாகவும். அவ்விடத்துக்கு யாரும் செல்லமுடியாத அளவு பிண வாடை காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடைவது மகிந்தருக்கு அறிவிக்கப்பட்டதாகவும், இருந்தாலும் கோத்தபாய உத்தரவின் பேரில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதகவும் அவர் தெரிவித்துள்ளார். அக் கால கட்டத்தில் எவரையும் சுடும் அதிகாரம் தமக்கு இருப்பதா இலங்கை இராணுவம் எண்ணிச் காட்டுமிராண்டித்தனமகச் செயல்பட்டதாக சொல்லியுள்ள அவர், இரணுவம் ஒரு மனிதநேயம் அற்ற காட்டுவாசிகள் போலச் செயல்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். இவரது பதிவுகள் ஆங்கிலத்தில் பகுதி 1 மற்றும் பகுதி 2 என வெளியாகியுள்ளது.

http://www.channel4.com/news/sri-lanka-war-crimes-soldiers-ordered-to-finish-the-job

http://www.channel4.com/news/the-sri-lankan-soldiers-whose-hearts-turned-to-stone

thanks to http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=312

போருக்கு பின் - 6 உள்ளாட்சித் தேர்தல்

ராகுல் காந்தி குடிசைகளில் நுழைந்து கூழ் குடித்துவிட்டு போஸ் கொடுத்த போதிலும், காங்கிரஸூக்கு தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு மரண அடி கிடைத்தது.
.
அதே மரண அடி இலங்கையில் ராஜபக்சேவுக்கு கிடைத்திருக்கிறது.
லட்சக்கணக்கான தமிழச்ச்சிகளின் தாலிகளைப் பறித்தெடுத்து, பொட்டுகளை அழித்தெடுத்த சுவடை மறைக்க பேரம் பேசி சில தமிழச்சிகள் தனக்கு பொட்டு வைப்பதாய் விளம்பரப்படுத்தினார் ராஜபக்சே. தன்னை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீதெல்லாம் மினி போர் தொடுத்து மிரட்டிப் பார்த்தார்.  ஆனால் எதற்கும் மசியாமல்இது எங்கள் ஈழம்.. இங்கே உனக்கு வேலையில்லைஎன்று ராஜபக்சேவை உள்ளாட்சித் தேர்தலில் விரட்டி அடித்திருக்கின்றனர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண தமிழர்கள்.
1976-ம் ஆண்டு நிறைவேற்றிய வட்டுக் கோட்டை தீர்மானத்தை இந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம் மீண்டும் வழிமொழிந்திருக்கிறார்கள் ஈழத்து மக்கள்.ஜூலை 23-ம் தேதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் ஈழப் பகுதியான இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.இந்தத் தேர்தலின் முடிவுகளை அளறி மாளிகையில் உடற்பயிற்சி செய்தபடி கேட்டுக்கொண்டிருந்த ராஜபக்சே, சிங்களர்கள் நிறைந்த தெற்கில் தன் கட்சி வெற்றி பெற்றதால் ஏற்பட்ட மகிழ்ச்சியைவிட, ஈழப் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரேயடியாக வென்றத்தில் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டார்.

தேர்தல் முடிவுகள் ஈழத் தமிழர்களின் மனசாட்சியை சர்வதேசத்துக்கு தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டாலும்... உள்ளபடியே அனைத்து தமிழர்களையும் வாக்களிக்கவிட்டிருந்தால் தமிழர்களின் வெற்றி இன்னும் பிரமாண்டமாய் அமைந்திருக்கும். அதைத் தனது ராணுவத்தின் மூலம் ராஜபக்சே தடுத்து நிறுத்தியிருக்கிறார் என்றேசொல்ல வேண்டும்.

அதற்கு ஆதாரமாக சில சம்பவங்களை அடுக்குகிறார்கள் ஈழத்திலிருந்து நமது சகோதரர்கள்.
‘‘
தேர்தல் நடாப்பதற்கு முன்பிருந்தே ஆர்மிக்காரர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து எங்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள்.யாருக்கு ஓட்டுப் போடுவீங்க..? என்று கேட்டார்கள். ‘கூட்டமைப்புக்குத்தான் போடுவம்என்று நெஞ்சு நிமிர்த்திச் சொன்ன தமிழர்களை அடித்து துவைத்து எடுத்தார்கள்அளவெட்டி என்னும் இடத்தில் கூட்டமைப்புக் காரங்கள் பிரசார வைபவத்தை ஒரு மண்டபத்தில் வைத்திருந்தார்கள். அங்கே முன்கூட்டியே வந்தார்கள் சிங்களக்காடையர்கள். எப்படித் தெரியுமா?கையிலே மண் வெட்டி, கடப்பாரை ஆகியவற்றை ஏந்திவந்து... ‘உடனே கலைந்துவிடுங்கள். இல்லையென்றால் அனைவரையும்2 வெட்டுவோம்என்றுகாட்டுமிராண்டிகளாகக் கத்தினர். வைபவம் நடக்கும் மண்டபத்திலுள்ள நாற்காலிகள் பொருட்கள் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டனர். அப்போது அங்கே இருந்தமாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன் ஆகிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்மிக்காரர்களை எதிர்த்து கடுமையாக பேசினார்கள்இது எங்கட உரிமை... இதுல தலையிட நீங்க யாரு? என்று கடுமையாக எதிர்த்ததோடு, பக்கத்திலுள்ள காவல் நிலையத்திலும் ஆர்மி மீது முறைப்பாடுசெய்துவிட்டார்கள். கூட்டமைப்பினர் கூடி இதையே தங்களது பிரசாரமாக்கிவிடுவார்கள் என்று பயந்துபோன சிங்கள ராணுவம்... அவசர அவசரமாக மண்டபத்துக்குவந்து தாங்கள் கலைத்துப் போட்டதை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டுப் போனார்கள்கிளிநொச்சியில் தேர்தலுக்கு முதல் நாள் பாரிய தேடுதல் வேட்டை ஆயிரக் கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகளை துப்பாக்கி முனையில் பறித்துச் சென்றதுராணுவம்.
ஆனால் தேர்தல் திணைக் களமோ வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வேறு ஆவணங்களை வைத்து3 வாக்களிக்கலாம் என்று அறிவிக்கைவெளியிட்டது. ஆனால் மக்களில் பலர் பயந்துகொண்டு வாக்களிக்க வந்திருக்கவில்லைஅவர்களும் வந்து வாக்களித்திருந்தால் ராஜபக்சே இன்னும் தூரத்துக்கு துரத்தப்பட்டிருப்பான்’’ என்கிறார்கள் ஈழத்து சகோதரர்கள்.இவ்வளவு நடந்தும் ஈழத் தமிழர்கள் தங்களுக்கான பிரதேச சபைகளை மீட்டிருக்கிறார்கள். குறிப்பாக பிரபாகரனின் சொந்த ஊர் வல்வெட்டித் துறையை தமிழ் தேசியகூட்டமைப்பு மீட்டிருக்கிறது.தமிழ்நாட்டு சட்டபை தீர்மானம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி சந்திப்பு, அமெரிக்க பொருளாதாரத் தடைத் தீர்மானம்ஆகியவற்றால் அலறிப் போய் அளறி மாளிகையில் இருக்கும் ராஜபக்சேவை, தங்கள் பங்குக்கு ஈழத் தமிழர்களும் திருப்பி அடித்துள்ளனர்.
ரசாயன ஆயுதங்கள், ஷெல்கள், பீரங்கிகள் என தமிழர்கள் மீது, ராஜபக்சே நடத்திய தாக்குதலுக்கு வாக்குச் சீட்டு மூலம் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர் ஈழத்தமிழர்கள்.தெற்கு சூடானை அடுத்து ஈழத்துக்கும் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுவரும் நிலையில்.. 1976-ல் நிறைவேற்றப்பட்டவட்டுக்கோட்டை தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி எங்களுக்கு தனி தமிழ் ஈழம் தேவை என்பதை பிரகடனப்படுத்திவிட்டனர் ஈழத் தமிழர்கள்.
-திலீபன்

Thursday, July 28, 2011

போருக்கு பின் - 5 தமிழர் என்பதால்

தமிழர் என்பதால் கொழும்பில் பிரபலமான கணக்காய்வு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கு நேர்ந்த கதி
[ வியாழக்கிழமை, 28 யூலை 2011, 11:39.02 AM GMT ]
தமிழராய் பிறந்தது தவறா? கொழும்பிலுள்ள பிரபலமான கணக்காய்வு நிறுவனத்தில் பணிபுரியும் தமிழர் ஒருவருக்கு நேர்ந்த கதி இது.
கணக்காய்வு நிறுவனங்கள் பிற நிறுவனங்களின் நிதியிடல் அறிக்கைகளையும் கணக்காய்வுகளையும் மேற்கொள்கின்றன. அந்த வகையில் இந்தப் பிரபலமான நிறுவனத்துக்கு துறைமுகத்திலுள்ள ஏற்றுமதி இறக்குமதியுடன் தொடர்புடைய நிறுவனமொன்றின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
அதன்பிரகாரம் துறைமுகத்துக்குள் அமைந்துள்ள அந்த நிறுவனத்துக்குச் சென்று கணக்காய்வுகளை மேற்கொள்ள பிரபல நிறுவனத்தின் சார்பாக நால்வர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் இந்தத் தமிழ் இளைஞரும் ஒருவர்.
ஆர்வத்துடன் பணியாற்றக் காத்திருந்த இவருக்கு இறுதியில் மிஞ்சியது ஏமாற்றம் மாத்திரமே. தமிழர் என்பதற்காக துறைமுகத்துக்கு உள்ளே செல்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.
துறைமுகத்துக்கு உள்ளே செல்வதாயின் அனுமதி அட்டை 'பாஸ்' பெறவேண்டிய நடைமுறை உண்டு. சிங்களவர் மூவருக்கு எந்தத் தடையுமின்றி அனுமதி அட்டை கிடைத்துள்ளது. எனினும் தமிழர் என்பதால் இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதுபற்றி அந்த இளைஞர் தனது உயரதிகாரியிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் இதுதான்.
"நான் என்ன செய்வது? நமது நாட்டின் நிலை இப்படிக் காணப்படுகிறது. தமிழருக்கு எந்த வகையிலும் சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது என நினைக்கிறார்கள். திறமையைப் பற்றி மூன்றாம் தரப்பினர் கவலைப்படுவதில்லை. இது என்னுடைய தவறில்லை. உங்களை வேறொரு நிறுவனத்துக்கு கணக்காய்வு செய்வதற்கு நியமிக்கிறேன்".
இந்த நாட்டில் தமிழராய் பிறந்தது எமது குற்றமில்லையே. அப்படியென்றால் கடவுளைத்தான் தண்டிக்க வேண்டும் என்கிறார் பாதிக்கப்பட்டவர்.
ஜனநாயகம், சுதந்திரம், நடுநிலை என அரசியல்தலைவர்கள் எவ்வளவுதான் பேசினாலும் இவ்வாறான அடிப்படை விடயங்களைத் திருத்தாவிடின் இனத்துவேசம் எங்கோ ஒரு மூலையில் நீறு பூத்த நெருப்பாக உயிர் கொண்டிருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

thanks to http://www.tamilwin.com/view.php?22Gp7bc3BI34eE29303jQKdd3Qjv20N923e4GLLcb2pGE2

Monday, July 18, 2011

போருக்கு பின் - 4 யுத்த வெற்றிக்கு உதவிய சர்வதேச நண்பர்களின் குரலை செவிமடுப்பதில் இலங்கை கவலைப்படவில்லை - கேணல் ஹரிகரன்

யுத்தத்தில் வெற்றிகொள்ள உதவிய சர்வதேச நண்பர்களின் குரலை செவிமடுப்பது குறித்து இலங்கை கவலைப்படவில்லை என்று கேணல் ஆர்.ஹரிகரன் கூறியுள்ளார்.

இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியவர் கேணல் ஹரிகரன். ட்ரான்ஸ்கரண்ஸ் இணையத்தளத்தில் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு கேணல் ஹரிகரன் பதிலளித்துள்ளார்.


ஆர்வமான சில கேள்விகளை வாசகர் எழுப்பியிருந்தார். நிந்தனையான வார்த்தைப் பிரயோகங்களுக்கு நான் வழமையாக்கப்பட்டிருந்தேன். (இந்தியா தொடர்பாகக் கலந்துரையாடும்போது பிரியமானவர்களாக இலங்கையர்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.) எவ்வாறாயினும் நாகரிகமான முறையில் வாசகர் கேள்விகளை எழுப்பியிருந்தார். நான் அவற்றுக்குப் பதில் கூறுகிறேன் என்று கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். எழுப்பப்பட்ட கேள்விகளும் ஹரிகரன் பதில்களும் வருமாறு:


கேள்வி: உலகளாவிய ரீதியில் இராணுவப் படைகள் நேர்மையான யுத்தங்களை நடத்துகின்றன என்று நீங்கள் நம்புகிறீர்களா? அவ்வாறாயின் அந்தப் படைகள் பற்றிக் குறிப்பிடுங்கள். தற்போதைய நிலைமையில் எந்தவொரு யுத்தமாயினும் நேர்மையானதாக இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?


பதில்: எனது 28 வருட தொழிலில் நான் பாரிய யுத்தங்கள் மற்றும் சிறிய யுத்தங்கள் பலவற்றில் பங்குபற்றியுள்ளேன். நேர்மையான யுத்தங்கள் இல்லை என்பதே எனது பதிலாகும். அவை ஒருபோதுமே நேர்மையானதாக இருக்கமாட்டாது,நேர்மையானதாகவும் அமையாது. ஏனென்றால் அடிப்படையில் இராணுவத்தின் தொழில் கொல்லுதல்,பொருள் வளங்களை அழித்தல் என்பதாகும். ஆதலால் அந்த மாதிரியான விடயங்கள் யுத்தத்தின் பாதிப்பிலிருந்தும் விடுபட்டவையாகவே அமையும்.
ஆனால், அரசாங்கங்களினதும் இராணுவங்களினதும் முயற்சியானது நாகரிகமானதாக இருக்க வேண்டும். தமது தீமையான செயல்பாடுகள் குறித்து தாங்கள் பதிலளிக்கும் தன்மையைக் கொண்டவர்களாக இருப்பதை ஜனநாயக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும். யுத்தத்தின்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும்போது குற்றவாளிகளைத் தண்டிக்கும்போது தமது நடவடிக்கைகள் தொடர்பாக பதிலளிக்கும் தன்மையைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.


கேள்வி: யுத்தத்தின்போது படையினரின் இலக்குகள் என்ன? உங்கள் பகைவரை அழிப்பதன் மூலம் பலவீனமாக்குவதா அல்லது பகைவரின் வளங்களை அழிப்பதன் மூலம் பலவீனமாக்குவதா? அல்லது மனித வளங்கள் மற்றும் பொருட்கள், உள்சார்கட்டமைப்பை பலவீனமாக்குவதா? இதன் மூலம் நீண்டகாலத்துக்கு இராணுவ அச்சுறுத்தல் பகைவரிடமிருந்து ஏற்பட முடியாதவாறு பலவீனப்படுத்துவதா?

பதில்: அரசியல் ரீதியான கோட்பாட்டைத் தவிர, யுத்த காலத்தில் படைகளின் இலக்குக் குறித்து நீங்கள் மிகவும் தெளிவான முறையில் கூறியுள்ளீர்கள். தமக்கு வழங்கப்பட்ட தேசிய சாசனத்தின் பிரகாரமே இராணுவங்கள் சண்டையிடுகின்றன. ஆதலால் பகைவரின் அரசியல் கோட்பாடு பற்றிய சுமையை இராணுவத்தினர் கொண்டிருப்பதில்லை.


கேள்வி: இந்தியப் படைகள் நேர்மையான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்திய சமாதானப் படை நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டது இலங்கையின் தெளிவான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்தது என்று நினைக்கின்றீர்களா? ஜம்முகாஷ்மீரில் இந்தியப் படை நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா? இந்தியப் படையினர் நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்று நீங்கள் கருதுவதாக ஜம்முகாஷ்மீர் மக்களிடம் நாங்கள் கேட்க முடியுமா?

பதில்: தயவுசெய்து உங்கள் முதல் கேள்விக்கான எனது பதிலை வாசியுங்கள். இலங்கையில் இந்திய சமாதானப் படையின் நடவடிக்கைகள் உட்பட அந்தப் பதில் இங்கு பொருத்தமாக அமையும். தேசிய நிகழ்ச்சி நிரல் தொடர்பாக யுத்தமிடும் படையினர் கவனத்தைக் கொண்டிருப்பதில்லை. யுத்தத்தின்போது அவர்கள் கொல்லும் இயந்திரங்களாக உருமாறுகின்றனர். ஆதலால் யுத்தத்துக்கு முன்னர் நிகழ்ச்சி நிரல் தொடர்பாக தேசியத் தலைவர்களே அதனை வழங்க வேண்டியுள்ளது.


கேள்வி: இலங்கைப் படையினரின் செயற்பாடு மட்டும் ஏன் ஆராயப்படுகிறது. குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் இவ்வாறு செயற்படுவதற்கு பூகோள அரசியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றதா? பூகோள அரசியல் விவகாரங்கள் உள்ளதை நீங்கள் நேர்மையான முறையில் ஏற்றுக்கொள்ள முடியுமா?

பதில்: நாடுகள் எவ்வாறு செயற்படுகின்றன என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே பூகோள அரசியல் விவகாரங்கள் உள்ளன. அதில் இலங்கையும் இந்தியாவும் உள்ளடங்குகின்றது. தந்திரோபாயமான பாதுகாப்புப் பற்றிய விடயமாக அது உள்ளது. இலங்கை இராணுவத்தின் செயற்பாடு மட்டும் பூகோள அரசியல் காரணங்களுக்காகத் தனியாக ஆராயப்படுவதாக நான் கருதவில்லை. அதேமாதிரியான தன்மையை இந்திய அமெரிக்க இராணுவங்கள் உட்பட வேறுபல இராணுவங்களும் எதிர்நோக்குகின்றன. ஆனால், இந்த நாடுகளில் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் சுறுசுறுப்புடன் செயற்படுகின்றனர். இராணுவங்கள் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அடிக்கடி தண்டனை வழங்கப்படுகிறது. ஆதலால் அவர்கள் அண்மைய காலங்களில் தமது முறைமைகள்,கட்டமைப்புகள் என்பனவற்றை மேம்படுத்த முயற்சிக்கின்றனர். இலங்கை ஏன் இப்போது கேள்விக்குட்படுத்தப்படுகின்றது என்பதற்கு இலகுவான பதில் உள்ளது. இலங்கையின் நன்மதிப்பு கவனத்திற்கெடுக்கப்படாமல் இருப்பதற்கு மூன்று சாத்தியமான காரணங்கள் இருப்பதாக நான் பார்க்கிறேன்.

1.நான்காவது ஈழப்போருக்கு நீண்டகாலத்திற்கு முன்பே மனித உரிமை மீறல் பொதியை இலங்கை சுமந்திருந்தது. அரசாங்கத்தின் பதிலளிக்கும் கடப்பாடு குறைவாக இருந்ததுடன், சிறப்பு விடுபாட்டுடன் சட்டமீறல்கள் காணப்பட்டன. இந்த விவகாரங்கள் குறித்து சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சர்வதேச சமூகம் கேள்விகளை எழுப்பியிருந்தது. அதிகளவு பதிலளிக்கும் தன்மையுடையதாக இலங்கை இருக்க வேண்டுமென்று சர்வதேச சமூகம் கேட்டிருந்தது. ஆனால், அவற்றைத் திருப்திப்படுத்துவதற்கு தீவிரமான முயற்சியை இலங்கை மேற்கொண்டிருந்ததாகத் தென்படவில்லை. புலிகளினால் முழுமையான மீறல்கள் இடம்பெற்றதாக இலங்கை சுட்டிக்காட்டியது. தான் சிறப்பாகச் செயற்படுவதாக அது காண்பித்துள்ளது. இப்போதும்கூட ஏனைய நாடுகளுடன் அது தன்னை ஒப்பிடுகின்றது.என்னைப் போன்ற வெளியாட்களின் பிரதிமை இவ்வாறு உள்ளது. ஆதலால் யுத்தத்தில் இலங்கை இராணுவத்தின் செயற்பாடு அதிகளவுக்கான பரிசீலனைக்கு உட்பட்டுள்ளது.


2.யுத்தத்தின்போது இலங்கை ஊடகங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியையே வழங்கியிருந்தது. ஐ.நா. மற்றும் சர்வதேச தொண்டர் ஸ்தாபனப் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டிருந்தனர். நவீன சகாப்தத்தின் தொடர்பாடலுக்கு இது மோசமான தன்மையைக் கொண்டதாகக் காணப்பட்டது. சர்வதேச ஊடகங்கள் அரசாங்கம் தெரிவிக்கும் விபரங்கள் மற்றும் வதந்திகளிலும் புலிகளின் பிரசார விடயங்களிலுமே தங்கியிருந்தன.ஆதலால் அவை நம்புவதற்கு முடியாதவை என அரசாங்கம் தெரிவித்தது.


3.ஆட்சித்துறையில் நான் நிபுணரல்ல. ஆனால், யுத்தத்தின் பின்னரும் கூட இந்த விடயம் எழுப்பப்பட்டிருந்ததை நான் பார்க்கிறேன். நிவாரண நடவடிக்கையை சொந்தமாக இலங்கை எடுத்திருக்க வேண்டும். பொதுமக்களின் துன்பங்கள்,முறைப்பாடுகள் தொடர்பான விடயங்களை கையாளுவதற்கு ஆணைக்குழுவை இலங்கை நியமித்திருந்தது. புலிகள் என்ன செய்தார்கள் என்பது தொடர்பாக பகிரங்க விசாரணையானது அதன் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தது. நல்லிணக்க ஆணைக்குழுவானது திடமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கவில்லை. தவறான செயற்பாட்டு விவகாரம் தொடர்பாக பல்வேறு விடயங்கள் எழுப்பப்பட்டிருந்தன. இப்போது சனல்4 இன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வதற்கு யோசிப்பதாக நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ளது. யுத்தத்தில் வெற்றிகொள்ள உதவியளித்த சர்வதேச நண்பர்களின் குரலை செவிமடுப்பதில் இலங்கை கவலை கொண்டதாக இருக்கவில்லை. ஆனால், அது தொடர்பாக சதி இருப்பதாக அது பார்க்கிறது. இந்த விடயமானது குற்றச்சாட்டுகள் தொடர்பாக பரந்தளவில் பிரபல்யத்தைக் கொடுத்திருப்பதுடன், இலங்கையிடமிருந்து பதில்களை பல நாடுகள் நாடிக்கொண்டிருக்கின்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.


http://www.thinakkur...8-10-36-34.html

Saturday, July 16, 2011

போருக்கு பின் - 3 - தமிழ் மன்னனான சங்கிலியன் சிலை உடைத்து அழிப்பு

யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்து அகற்றப்படுகின்றது. சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

[ புதன்கிழமை, 13 யூலை 2011, 01:34.13 PM GMT ]
பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இப்போதுள்ள சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியச் சிற்பியின் கைவண்ணத்தில் புதிய அழகிய சிலை நிறுவப்படும் என்று யாழ்.மாநகரசபை ஆணையாளர் மு.செ.சரவணபவ தெரிவித்தார்.புதிய சிலை அமைப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். யாழ்.மாநகரசபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக சங்கிலிய மன்னனது நினைவுத் தூபியை உயிரோட்டமுள்ளதாக மீள நிர்மாணிப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
தற்போது, சங்கிலிய மன்னனது சிலை முற்றாக இடித்தழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்தியச் சிற்பியான புருசோத்தமன் அந்தச் சிலையை மீள உயிரோட்டமுள்ளதாக நிர்மாணிக்க உள்ளார். சபை நிதி ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1500 செங்கற்களும் 10 சீமெந்துப் பைக்கற்றுகளும் வழங்கவுள்ளோம். மாநகர சபை ஊழியர்களும் நிர்மாண வேலையில் பங்கேற்க உள்ளனர் என்றார் ஆணையாளர். மீள அமைக்கப்படும் இந்தச் சிலையில் சங்கிலிய மன்னனின் வாளேந்தும் போக்கில் சிறு மாறுதல் செய்யப்படவுள்ளதாக மாநகர சபையின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவித்தன