Thursday, August 11, 2011

2076 இந்து கோயில்களை சிங்கள வெறியர்கள் இடித்து அழித்தார்கள்

ஒருகாலத்தில் தமிழீழத்தில் சிவ தலங்களில் தேவாரம் ஒலித்துக்கொண்டே இருக்கும். திருவிழாக் காலங்களில் இசை நிகழ்ச்சி & பரத நாட்டியம் & காவடி ஆட்டம் & கும்மி & கரகம் நடக்கும். மங்கல இசைக் கருவி நாகசுரம் இசைக்கும் & தவில் முழங்கும். அம்மன் கோயில்களில் உடுக்கை இசை எழும். பண்டைத் தமிழிசைக் கரு வியான பறை ஒலிக்கும். நாட்டுக் கூத்து விடிய விடிய நடக்கும். தேர்த் திருவிழாவில் அழகிய சிற்பத்தேர் தெரு உலா வரும்.

இன்று... சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு தமிழர்களின் இந்த சிவத் தலங்களும் தப்பவில்லை.


இலங்கைத் தீவில் கி.மு.1000இல் ஐம்பெரும் சிவன் கோயில்கள் இருந்தன என்பது வரலாறு.


திருக்கோணமலை கோணேசுவரமும் - மன்னார் திருக்கேதீசுவரமும் - கீரிமலை நகுலேசுவரமும் - சிலாபம் முனீசுவரமும் - தேவன்துறை சந்திர மவுலீசுவரமும் தமிழர்களின் சைவத் திருத்தலங்களாகத் திகழ்ந்தன.


தெற்கிலங்கையில் தேவன் துறையில் அமைந்த சந்திர மவுலீசுவரமும் - மாகாணப் பிரிவினையின் போது சிங்களவர் கையில் வீழ்ந்த சிலாபம் முனீசுவரமும் தமிழீழத்துக்கு வெளியே பறிபோயிற்று.


தமிழீழத்தின் தலைநகரான திருக்கோண மலையில் சம்பந்தரால் பாடப்பட்ட கோணேசுவரம் இன்று சிங்கள இனவெறியர்களால் சூழப்பட்ட தலமாக இருக்கிறது. இக்கோயில் அமைந்த மான்கள் விளையாடும் கோணமலைக் குன்றில், வானை முட்டும் புத்தர்சிலை ஒன்றை நிறுவித் தமிழர்களை வம்புக்கு இழுத்திருக்கிறார்கள் சிங்களவர்கள்.


மன்னாரில் - சுந்தரரால் பாடப்பட்ட திருக்கேசுவரம் கோயில் காணியில் மக்கள் எதிர்ப்பையும் மீறி முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு - ‘மகாதித்த விகாரை’ என்னும் மிகப் பெரிய புத்தர் கோயில் எழுப்பப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.


சிறப்பு மிக்க நகுலேசுவரம் அமைந்த கீரிமலை ஊரின் பெயர்கூடச் சிங்களப் பெயராய் மாற்றப்பட்டிருப்பதாகச் செய்தி.


பண்டைக் காலத்தில் அனுராதபுரத்தில் அமைந்திருந்த சிவன்கோயில் ஒன்றை அழித்து - அதன்மேல் எழுப்பப்பட்டதே ‘அபயகிரி விகாரை’ என்னும் புத்தர் கோயில் என்று, மலல சேகர - அரிச்சந்திர ஆகிய சிங்கள வரலாற்றாளர்களே பதிவு செய்திருக்கிறார்கள்.

கதிர்காமம் அது தமிழர் ஊர் என்பதை ‘கதிர்காமம்’ என்னும் தூய தமிழ்ப்பெயரே உறுதி செய்யும். காலம் காலமாகத் தமிழர் வழிபட்டு வந்த முருகன் கோயில் தலமான கதிர்காமம் இன்று தமிழர் கையில் இல்லை.

சிவ மதத்துக்கு எதிரான நெடுங்கால சிங்கள -புத்த அழிவு நடவடிக்கைகளில் சில இவை.

தமிழீழத்தில் - தெய்வ வழிபாட்டு இடங்களாக மட்டும் அல்ல - தமிழ்மொழி - தமிழ்க் கலைகள் - தமிழ்ப் பண்பாடு காப்பகங்களாகவும் சிவ தலங்கள் திகழ்கின்றன. இதன் காரணமாகவே இக் கோயில்கள் சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு இலக்காவதைப் பார்க்கிறோம்.


தமிழீழத்தில் 24.12.2003 வரை சிங்கள வான்படை நடத்திய குண்டு வீச்சில் 2076சைவக் கோயில்கள் உடைத்துத் தகர்த்து நொறுக்கப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


அயோத்தியில் ஒரு இராமர் கோயிலை அழித்தார்கள் என ஓங்கி முழக்கமிடும் இந்தியாவின் சிவ மதத்தினர், தமிழீழத்தில் 2076 சைவக் கோயில்களை சிங்கள - புத்த வெறியர்கள் இடித்து - உடைத்து அழித்துக் கொட்டியிருக்கிறார்களே - அமைதி காப்பது ஏன்?


முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு - தமிழீழத்தின் மூலை முடுக்குகள் எங்கும் - புதிது புதிதாய் புத்தர் கோயில்கள் தழைக்கத் தொடங்கி உள்ளன.


புலிகளின் தலைமையகமாகத் திகழ்ந்த கிளிநொச்சியில் புத்த விகாரை ஒன்று புதிதாக முளைத்திருக்கிறது.


செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எழுப்பினான் என்பது வரலாற்றுச் செய்தி.சேரநாட்டு எல்லையில் அவன் எழுப்பிய மங்களாதேவி கோயிலைத் தவிர - தமிழ்நாட்டில் கண்ணகிக்கு எந்த ஊரிலுமே கோயில்கள் இல்லை.


ஆனால் - தமிழீழத்தில் ஊர்தோறும் கண்ணகிக்குத் தமிழர்கள் கோயில் எழுப்பி இருக்கிறார்கள்.


1999இல் தமிழீழத்தில் - புங்குடுதீவு கண்ணகி கோயில் குருக்களின் மனைவி சாரதாம்பாளை சிங்களப்படை வெறியர்கள் - ‘கற்பரசி’ கண்ணகி கோயிலிலேயே கற்பழித்துப் பிணமாகப் போட்டார்கள்.


தமிழர்களின் கோயிலில் நிகழ்ந்த சிங்கள இனவெறிப் படுகொலை ஒன்றுதான் பிரபாகரனை தமிழீழ விடுதலைக் களத்தில் ஆயுதப் போராளி ஆக்கியது.


பிரபாகரனே சொல்கிறார்.


‘‘கொழும்புக்குப் பக்கத்தில் பாணன்துறை சைவக் கோயில் ஒன்றில் - 1958-இல் சிங்கள இனவெறியர்கள் ஒரு தமிழ்க் குருக்களை நெருப்பு மூட்டி உயிரோடு துடிக்கத் து டிக்க எரித்துக் கொன்றார்கள். ‘நான் சின்னஞ் சிறுவனாக இருந்தபோது - எங்கள் வீட்டில் - அடிக்கடி என் பெற்றோர் அந்தக் கொடுமை பற்றி மனம் நொந்து பேசக் கேட்டிருக்கிறேன். நான் ஆயுதம் ஏந்த அந்த நிகழ்வும் ஒரு காரணம் ஆயிற்று’ என்கிறார் பிரபாகரன்.


அறம் கொல்லும் சிங்கள - புத்த இனவெறி என்னதான் வலிமைமிக்கதாக இருந்தாலும் - தமிழீழத் தேசிய இனம் பணியாது - தமிழீழ விடுதலைப்போர் தணியாது என் பதில் ஐயமில்லை.


விடுதலைக்கான தேவை இருக்கும் வரை -விடுதலைக்கான போராட்டமும் இருக்கும்.

- குமுதம் 

thanks to http://www.yarl.com/forum3/index.php?showtopic=90169

Monday, August 8, 2011

போருக்கு பின் -10 தமிழ் படித்த புத்தர் ---தமிழை அழிக்கும் சிங்களர் -காசி ஆனந்தன்

தமிழீழ மண்ணின் ஊர்ப் பெயர்கள் & தெருப் பெயர்கள் & வணிக நிலையப் பெயர்கள் அனைத்தும் பிரபாகரன் காலத்தில் தனித் தமிழ்ப் பெயர்களாய் தகதகத்தன.

இன்று -தமிழீழத்தின் அனைத்து தமிழ்ப் பள்ளிக் கூடங்களுக்கும் மீண்டும் சிங்கள ஆசிரியர்கள் அனுப்பப்படுவதாக சினமூட்டும் செய்திகள் வெளிவருகின்றன.

தமிழீழத் தேசிய இனத்தின் முதன்மை உயிர்க் கூறான தாய் மொழியாம் தமிழ்மொழி,சிங்கள இனவெறி அரசால் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டிருக்கிறது.

ஒரு பொருள் இன்னொரு பொருளோடு நெருக்கமாக இயையும் போதில் - கல்லோடு கல் உரசுதல் -வெப்பக் கருத்தும் ஒளிக் கருத்தும் தோன்றுகின்றன என்றும் - ‘இலங்குதல்’ என்னும் ஒளி குறித்த தமிழ்ச் சொல் இப்படித்தான் தோன்றிற்று என்றும் மொழி இயலாளர்கள் சொல்கிறார்கள்.

இலங்குதல் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதே ‘இலங்கை’ என்னும் சொல்லாகும்.இச் சொல்லையே சிங்களர்கள் ‘லங்கா’ ஆக்கினார்கள்.

சிங்களவன் இன்று சிங்கள நாடு என்று பெருமையோடு மார்தட்டி உடல் சிலிர்க்கும் - அவன் மண்ணின் பெயர் கூட - சிறீலங்கா - சிங்கள மொழி அல்ல - தமிழேயா கும்.

சிங்கள மொழியில் 50 விழுக்காடு தமிழ்ச் சொற்கள் இருப்பதாக சிங்கள மொழி ஆய்வாளர்களே கூறுகிறார்கள்.சிங்களத்துக்குச் சொல் தந்த தமிழையே சிங்களம் அழிக்கிறது.

கி.மு. 3-ம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட சங்க காலத்தில் தமிழீழத்தில் இருந்து ஈழத்துப் பூதன் தேவனார் என்னும் புலவர் தமிழ்நாடு வந்து தமிழ் பாடினார். இக் காலத்தில் சிங்களப் புலவன் எவனும் உலகில் இல்லை. ஏனெனில், சிங்கள மொழியே அன்று இல்லை.
கி.மு. 6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தர் தமிழ் படித்தார் என்று ‘லலிதா விஸ்தாரம்’ என்னும் வடமொழி நூல் கூறுகிறது. புத்தர் சிங்களம் படித்தார் என்று எந்தச் செய்தியும் இல்லை. ஏனெனில், புத்தர் காலத்தில் சிங்கள மொழி இல்லவே இல்லை.

புத்த மதத்தை நெறியாக அல்ல -வெறியாகக் கொண்ட இலங்கை அரசுதான் இன்று புத்தர் படித்த தமிழுக்குப் பாடை கட்டிக் கொண்டிருக்கிறது.

நீண்ட நெடுங்காலமாக இலங்கையில் இருந்த தமிழ் ஊர்ப் பெயர்களை மாற்றி - சிங்களப் பெயர்கள் சூட்டி - தமிழ் மொழி அழிப்பிலும் - தமிழர் நிலப் பறிப்பிலும் ஈடுப ட்டு வருகிறது சிங்கள அரசு.

தேவன் துறை - ‘தொந்தறை’ ஆகியது. மாத்துறை - ‘மாத்தறை’ ஆகியது.
இப்படி தமிழ்ப் பெயர்கள் அழிக்கப்பட்ட ஊர்கள் பல - மிகப் பல.

1956-ல் அன்று தலைமை அமைச்சராக இருந்த பண்டாரநாயகா இலங்கை நாடாளுமன்றத்தில் ‘தனிச் சிங்களச் சட்டத்தை’(only Sinhalar act) நிறைவேற்றினார்.

சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே அரசுப் பணி வழங்கப்படும் என்று அறிவித்தது சிங்கள அரசு.

தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு சிங்கள ஆசிரியர்கள் அனுப்பப்பட்டார்கள். தனிச் சிங்களப் பள்ளிக்கூடங்கள் கூட தமிழீழத்தில் திறக்கப்பட்டன. இதற்கு முட்டுக்கட்டை போட்டார் பிரபாகரன்.

பிரபாகரன் ஆயுதத்தோடு களத்தில் நின்ற 33 ஆண்டுகள்தான் தமிழ்மொழி சிங்கள ஆட்சியாளரின் இனவெறிப் பிடியில் இருந்து தப்பிப் பிழைத்தது.
முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு மீண்டும் பெயர் மாற்றி மகிழ்கிறார்கள். மல்லாகம் - ‘மளலகம’ ஆகியிருக்கிறது. புங்டுதீவு- ‘புவன்குடீப’ ஆகியிருக்கிறது...

ஒரு தேசிய இனத்தின் உயிர்க் கூறுகளான - மொழி - தாயகம் - மக்கள் - இம்மூன்றும் உடைந்து நொறுங்கி தமிழீழத் திருநிலம் ஒடுங்கி நிற்கிறது.



- குமுதம்
thanks to http://www.yarl.com/forum3/index.php?showtopic=90042

Tuesday, August 2, 2011

தேர்தலில் தமிழக மக்கள் பாடம் கற்பித்தும் இந்திய அரசு திருந்தவில்லை-பழ. நெடுமாறன்

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு நல்ல பாடம் கற்பித்தும்கூட இந்திய அரசு திருந்தவில்லை. இதனால்தான் இலங்கை எம்.பிக்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்துள்ளது மத்திய அரசு. இந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்று தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய அரசின் அழைப்பின் பேரில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்சே தலைமையில் வந்துள்ள குழுவினருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டம் தொடங்கும் வேளையில் இலங்கை நாடாளுமன்றக் குழு வந்திருப்பது திட்டமிட்ட ஒன்றாகும். சில நாட்களுக்கு முன்னால் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் கொழும்பு சென்று ராஜபக்சேவை சந்தித்துப் பேசியதின் விளைவாகவே இக்குழு அனுப்பப்பட்டுள்ளது.

மழைக்காலக் கூட்டத் தொடரில் ஈழத் தமிழர் பிரச்சனை உறுதியாக எழுப்பப்படும் என்ற காரணத்தினால் எதிர்க்கட்சிகளைத் திசைத் திருப்புவதற்கு இலங்கைக் குழுவை இந்திய அரசு திட்டமிட்டு வரவழைத்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக மக்களின் மன உணர்வுகளை மேலும் மேலும் அவமதிக்கும் வகையில் இந்திய அரசு ராஜபக்சே குழுவுடன் கைகோர்த்து நிற்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு நல்ல பாடம் கற்பித்தும்கூட இந்திய அரசு திருந்தவில்லை. தமிழக மக்கள் இந்த துரோகத்தை ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என எச்சரிக்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

thanks tohttp://thatstamil.oneindia.in/news/2011/08/02/neduamaran-accuses-centre-distracting-tamils-issue-aid0128.html

Saturday, July 30, 2011

போருக்கு பின் -9 வன்னியில் எஞ்சியிருந்த இரும்புகளும் தென்னிலங்கைக்கு

30 July, 2011 by admin
வன்னிப் போரில் அழிவடைந்த சொத்துக்களில் எஞ்சியிருக்கும் இரும்புகளையும் முழுமையாக வன்னியில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் பாதுகாப்பு அமைச்சு ஈடுபட்டிருக்கின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள்குடியேற்றம் இடம்பெறாத பகுதிகளில் இருந்து நாள் தோறும் ஆறு தொடக்கம் பத்து வரையான கனரக வாகனங்களில இரும்புப் பொருட்கள் ஏற்றப்பட்டு தென்பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந் நடவடிக்கையில் சிங்களவர்களும், முஸ்லிம்களும் ஈடுபட்டுவருகின்றனர்.

வீடுகளின் கதவுகள், கேற்றுக்கள், வாகனங்கள், தளபாடங்கள் உட்பட்ட வீடுகளில் காணப்படும் அனைத்து இரும்புப் பொருட்களும் ஏற்றப்படுவதாகவும் பெரிய அளவிலான இரும்புப் பொருட்களை துண்டுகளாக்குவதற்கான இயந்திர சாதனங்கள் தென்னிலங்கையில் இருந்து கொண்டுவந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக அரச அதிகாரி ஒருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இவ்வாறு ஏற்றப்படும் நடவடிக்கை பாதுகாப்பு அமைச்சின் பணிப்பின் கீழேயே முன்னெடுக்கப்படுவதாகவும், கேள்வி கோரல் அடிப்படையில் இந்த நடவடிக்கைகளை ஒப்பந்தகாரர்களிடம் பாதுகாப்பு அமைச்சு வழங்கியிருப்பதாக குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

வன்னியில் இருந்து இரும்புப் பொருட்களை அகற்றவேண்டும் என்ற பணிப்புரைக்கு அமையவே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொருட்களை ஏற்றுவோர் தெரிவிப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு கள்ளப்பாட்டினைச் செர்ந்த சம்மாட்டியார் அந்தோனி கிறிஸ்தோப்பர் கருத்துத் தெரிவிக்கையில்,

போரினால் உயிர்களையும், உடைமைகளையும் இழந்த நாங்கள் இறுதியாக கைப்பைகளுடனேயே எமது ஊர்களை விட்டு இடம்பெயர்ந்தோம். மீண்டும் நாங்கள் திரும்பி வருகின்ற போது எமது வீடுகளில் இரும்புகளாவது இருக்கும் என்ற நம்கை இருந்தது. ஆனால் தற்போது எமது சொத்துக்கள் என்று நினைவிற்கு வைத்திருக்க ஒரு இரும்புத் துண்டு கூட இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

முன்னரும் இவ்வாறான நடவடிக்கைகள் விசுவமடு, தர்மபுரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட போது கூட்டமைப்பினரின் தலையீட்டினை அடுத்து அவை தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. தற்போதும் இராணுவக் காவலரண்களுக்கு முன்பாக இரும்பு, அலுமினியப் பொருட்களை ஏற்றிச் செல்லத் தடை என விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

thanks to http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=321 

இந்திய தூதரக அதிகாரிகள் உதவி செய்வதில்லை


JULY 30, சென்னை:  நல்ல வேலை கிடைக்கும், கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்று மலேசியா சென்றவர்கள் ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டு, முறையான ஆவணங்கள் இல்லாததால் மலேசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலர் நோய் வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்று மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ள தமிழர்கள் தெரிவித்தனர். காரைக்குடியை அடுத்த நடுவிக்குளத்தைச் சேர்ந்த சின்னசாமி (31) கூறியதாவது: நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதால் மலேசியா செல்ல முடிவு செய்தேன். அப்போது பரமக்குடியை சேர்ந்த ஏஜென்ட் சரவணன், மலேசியாவில் ஓட்டல் வேலை உள்ளது என்றார். அவர் சொன்னபடி 85 ஆயிரம் பணத்தை கட்டினேன்.

அவர் மலேசியா செல்ல விசா, தங்கி வேலை செய்ய பர்மிட் ஆகியவை வாங்கி அனுப்பினார். ஆனால் அங்கு போனால் கோல்ப் மைதானத்தில் புல் வெட்டும் வேலை. சம்பளமும் சொன்னபடியில்லை. அங்கு அறிமுகமான வர்களின் உதவியால் ஓட்டல் வேலைக்கு சென்றேன். பர்மிட் முடிவதற்குள் புதுப்பிக்க ஏஜென்ட் சரவணனை தேடினால் கிடைக்க வில்லை. அதனால் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் கிளந்தான் மாநிலத்தில் உள்ள தனமேரா முகாமில் அடைத்தனர். அங்கு என்னைபோல் 250 பேர் இருந்தனர். அங்கிருந்து நெகிரிசெம்புலானில் உள்ள லிங்கி முகாமுக்கு மாற்றினர். அங்கு 1075 பேர். கடைசியாக கோலாலம்பூரில் உள்ள முகாமுக்கு கொண்டு வந்தனர். அங்கும் 1075 பேர் இருந்தனர். மூன்று முகாம்களில் ஆண்களின் எண்ணிக்கைதான் இது. பெண்களுக்கு தனி முகாம் உள்ளது. முகாமில் உள்ளவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் தமிழர்கள். முகாமில் சாப்பாடு தான் பிரச்னை. சரியான உணவில்லாமல் நோயுற்று அடிக்கடி யாராவது இறப்பார்கள்.

மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினோம். அவர்கள் கண்டு கொள்ளவில்லை அதன் பிறகு மலேசிய குளோபல் அமைப்பை நடத்தும் கமலநாதன் என்பவருக்கு வேண்டுகோள் விடுத்தோம். அவர் எங்களை தமிழகத்துக்கு அனுப்பி வைத்தார். தமிழகத்தில் உள்ள மீட்பு அமைப்பும், கட்டட தொழிலாளர்கள் சங்கமும் உதவின. மீட்க வேண்டியவர்கள் அங்கு நூற்றுக்கணக்கில் உள்ளனர். இனி வெளிநாடு செல்பவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவரைப்போலவே மயிலாடுதுறை அருகே உள்ள தேரெழுந்தூரைச் சேர்ந்த ஜுபைர் அலி (38), ஓட்டல் வேலை என்று சொல்லி மலேசியா அனுப்பப்பட்டார். அவருக்கும் அங்கு புல் வெட்டும் வேலைதான். இவரும் சிறை தண்டனை அனுபவித்து விட்டு மூன்று முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டார். இவரிடமிருந்தும் 800 வெள்ளி பணம், ஒரு செல்போனை போலீசார் வாங்கிக் கொண்டு திரும்ப தரவில்லை.

கண்டுகொள்ளாத தூதரகம்: மலேசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் முறையிட்டால் கண்டு கொள்வதில்லை. பர்மிட்டை புதுப்பிப்பதற்கு வாய்ப்பில்லாததால், இந்திய தூதகரத்தை தஞ்சம் அடைந்தால் அவர்கள் விரட்டி விட்டு விடுகிறார்களாம். முகாமில் இருந்து கடிதம் எழுதினாலும், பதில் வருவதில்லையாம். மலேசியாவில் 48 வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ளனவாம்.

இவற்றில் 47 நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள், மாதத்திற்கு ஒருமுறை முகாம்களுக்கு வந்து தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடி உதவி செய்கின்றனர். ஆனால் ஓரே ஒரு நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் மட்டும் முகாம் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. அது இந்திய தூதரக அதிகாரிகள்தான். இத்தனைக்கும் முகாம்களில் தமிழர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்கின்றனர் மீட்பு அமைப்பு நிர்வாகிகள் சேரன், சிவசோமசுந்தரம்.
thanks to http://www.sinthikkavum.net/2011/07/blog-post_541.html

Friday, July 29, 2011

போருக்கு பின் -8 செய்தி இணையங்கள் தொடர்பாக புது விதிமுறை

இலங்கையிலிருந்து பிரசூரமாகும் செய்தி இணைய தளங்கள் தொடர்பில் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இலங்கை ஊடக முறைப்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் இயங்கி வரும் இணைய செய்தி ஊடகங்கள் எவ்வாறு எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என்பது குறித்து புதிய ஒழுக்க விதிகள் தயாரிக்கப்பட உள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. செய்தி இணைய தளங்களுக்கு பொதுவான ஒழுக்க விதிகளை அறிமுகம் செய்வது குறித்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆங்கில மொழி முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பானர் சுகுமார் ரொக்வுட் தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைத் திட்டம் ஆரம்ப நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகை ஆசிரியர் பேரவையினால் பின்பற்றப்படும் ஒழுக்க விதிகள் இணைய ஊடகங்களுக்கும் பொருந்தும் எனவும், சில விடயங்களில் மட்டும் மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

thanks to http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=303

போருக்கு பின் - 7 இலங்கை ராணுவத்தின் 58 வது பிரிவில் கடமையாற்றிய உயரதிகாரியான பெனான்டொ

இலங்கை ராணுவத்தின் 58 வது பிரிவில் கடமையாற்றிய உயரதிகாரியான பெனான்டொ ஏன்பவர் தறோது ஒரு வெளிநட்டில் சரணடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிற்து. 

இறுதி நேர்த்தில் நடந்த பொரில் இரணுவம் செய்த அட்டூளியங்களை அவர் புட்டுப் புட்டு வைக்கிறர். இரணுவ தேசிய அடையள அட்டையோடு தன்னை இரூபிக்கும் அவர், சமீபத்தில் சனல் 4 தொலைக்கட்சிக்கு முகம் மறைக்கப்பட்ட நிலையில் நேர்கணல் ஒன்றையும் வழங்கியிருந்தார். 

காயப்பட்டு வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்கள் பலரை இலங்கை இராணுவம் கற்பழித்ததாக அவர் தெரிவித்துள்ளார். தான் சொந்தக் கண்களால் கண்டதாகக் கூறும் இவர் புதுமாத்தளான் பிடிபடும்போது அன்றய தினம் மட்டும் சுமார் 1,500 பொதுமக்கள் இறந்ததாகத் தெரிவித்தார்.

போரில் ஈடுபட்ட 58 வது படைப்பிரிவில் உள்ள படையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்ததாகவும், பெண்களைக் கெடுத்து வல்லுறவில் ஈடுப்ட்டது மட்டுமல்லது, அவர்களின் மார்பகங்களை வெட்டி எறிந்ததாகவும், பல சிறுவர்களைச் சுட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். காட்டு மிராண்டிகள் பொலச் செயல்பட்ட இவர்கள் காணும் இடத்தில் பெற்றொர்களுக்கு முன்னர் அவர்களின் பிள்ளைகளிக் கற்பழித்ததாகவும் தெரிவித்துள்ளர். பல இடங்களில் கணப்பட்ட உடலங்களில் தலை துண்டிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கான சரியான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. இருப்பினும் பல நூற்றுக்கணக்கான உடலங்கள் தலையின்றி முண்டமாக நிலத்தில் கிடந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இறுதியாகப் புலிகள் 1 கிலேமீட்டர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டவேளை, 58 வது படைபிரிவின் கட்டளைத் தளபதி ஷர்வேந்திர சில்வாவுடன் தொடர்புகோண்ட கோத்தபாய, அந்தச் சின்னத் துண்டு இடத்தைப் பிடிக்க என்னவேண்டும் என்றாலும் செய்யுங்கள் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சரணடையும் புலிகளின் உறுப்பினர்களில் எவர் எவரை இராணுவம் சுடவேண்டும் என்பதன் பட்டியல் கூட கோத்தபாயவால் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிற்து. புலிகளின் சில சிரேஷ்ட தலைவர்களின் புதுத் தோற்றப் படங்களும் 58 வது படைப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. போரில் சுமார் 50,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்த பொனான்டோ என்ற அதிகாரி, பலரது உடலங்களை அடகம் செய்ய முடியாத இராணுவத்தினர், அதன் மேல் மண்போட்டு மூடியதாகவும் தெரிவித்தார்.

பிணங்களை அப்படியே நிலத்தில்போட்டு, அதன்மேல் புள்டோசர் கொண்டு மண்னை வாரி, அணைபோலப் போட்டு மூடியதாகவும் தெரிவித்த அவர், அவ்விடமே பிண வாடையோடு இருந்தாகவும். அவ்விடத்துக்கு யாரும் செல்லமுடியாத அளவு பிண வாடை காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடைவது மகிந்தருக்கு அறிவிக்கப்பட்டதாகவும், இருந்தாலும் கோத்தபாய உத்தரவின் பேரில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதகவும் அவர் தெரிவித்துள்ளார். அக் கால கட்டத்தில் எவரையும் சுடும் அதிகாரம் தமக்கு இருப்பதா இலங்கை இராணுவம் எண்ணிச் காட்டுமிராண்டித்தனமகச் செயல்பட்டதாக சொல்லியுள்ள அவர், இரணுவம் ஒரு மனிதநேயம் அற்ற காட்டுவாசிகள் போலச் செயல்பட்டதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். இவரது பதிவுகள் ஆங்கிலத்தில் பகுதி 1 மற்றும் பகுதி 2 என வெளியாகியுள்ளது.

http://www.channel4.com/news/sri-lanka-war-crimes-soldiers-ordered-to-finish-the-job

http://www.channel4.com/news/the-sri-lankan-soldiers-whose-hearts-turned-to-stone

thanks to http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=312