Thursday, November 18, 2010

பேராசிரியர் பி.விருத்தாசலம் உடல்நலக்குறைவால் மரணம்

பேராசிரியர் பி.விருத்தாசலம் உடல்நலக்குறைவால் மரணம்

முன்னாள் தமிழ்வேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரி முதல்வரான  பேராசிரியர் பி.விருத்தாசலம்  உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
தன் வரலாற்றுக் குறிப்புகள்.
தென்காவேரி என்பது என்னை ஈன்று புறந்தந்த தாயின் பெயர். பொ.பிச்சையா நாட்டார் என்னைச் சான்றோன் ஆக்கிய என் தந்தையின் பெயர். என் பிறந்தநாள் 22-05-1940. ஆனாலும் நான் நான்கு வயதுச் சிறுவனாக இருந்த போது என் அண்ணன் பள்ளிக்கூடம் போவதைப் பார்த்து நானும்  பள்ளிக்கூடம் போவேன் என்று அடம்பிடித்து, நடுத்தெருவில், புழுதிமண்ணில் கிடந்து புரண்டு அழுது, ஆர்ப்பாட்டம் செய்த என் தொல்லை பொறுக்கமாட்டாமல், என் தாய் எனக்கு போட்டுவிடக் கால்சட்டையோ மேல் சட்டையோ இல்லாத நிலையில், என் தந்தையின் துண்டு ஒன்றை இடுப்பில் சுற்றிவிட்டு என்னைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்.

எப்படியோ காலம் விரைந்து ப்றந்தோடி விட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள என் பிறந்த ஊரான மேலத்திருப்பூந்துருத்தியில் எட்டாம் வகுப்புவரை படித்துத் தேர்ச்சிபெற்றேன். திருவையாறு சீனிவாசராவ் மேனிலைப்பள்ளி, பூண்டி திரு புட்பம் கல்லூரி, திருவையாறு அரசர் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து படித்தேன். தமிழில் வித்துவான் பட்டம் பெற்றேன். சென்னையில் தமிழாசிரியராக பணிபுரிந்துகொண்டே தனியாகப் படித்து பி.ஏ. பட்டம் பெற்றேன். கரந்தைப் புலவர் கல்லுரியில் 25-06-1969 இல் பணியில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டே தனியாகப் படித்துத் தேர்வெழுதி எம்.ஏ பட்டம் பெற்றேன். இது படித்துப் பட்டம் பெற்ற வரலாறு.

என் ஊனிலும் உயிரிலும் கலந்து என்னை இயக்கி வரும் இலக்கிய வரிகள்
1. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
2. பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
3. பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக
4. எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
5. அறிவை விரிவு செய்; அகண்டம் ஆக்கு. விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை

இனியும் என் தொண்டுகள் தொடரும்
நாடுவாழ நான் வாழ்வேன்
நன்றி, வணக்கம்.

பேராசிரியர் பி.விருத்தாசலம் எழுதிய நூல்கள்
1. சான்றோர் சிந்தனைகள்
2. காவிரிக்கரை வேங்கடம்
3. தமிழ்வேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நாட்டாரையாவும்
4. கண்ணகி சிலம்பீந்த காரணம்
5. மரூஉ மொழிகளும் வழூஉ மொழிகளும்
6. என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்
7. சிந்தனைச் சுடர்

Sunday, September 5, 2010

பூலித்தேவன் மீது ஆணை பிரபாகரன் மீண்டும் வருவார்-பழ.நெடுமாறன்

வெள்ளையனை நோக்கி பூலித்தேவன் பாய்ந்தார்! சிங்களவனை நோக்கி பிரபாகரன் பாய்ந்தார்!: காசிஆனந்தன்[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:20.19 AM GMT +05:30 ]


வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை?எத்தனை? இவ்வாறு நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார்.
தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் கருணாஸ்,சசிகலா கணவர் எம்.நடராஜன் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் கவிஞர் காசி ஆனந்தன் தனதுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

2 லட்சம் ஈழத் தமிழர்களையும் 40 ஆயிரம் விடுதலைப்புலிகளையும் ஈவு இரக்கமற்று கொன்று குவித்தது சிங்கள இராணுவம்.
ஈழத்தில் நாங்கள் போராடவில்லை. போராட்டம் எங்களுக்கு திணிக்கப்பட்டது. அதனால்தான் நாங்கள் போராடுகிறோம்.

வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை?எத்தனை?

கொடூரத்தின் உச்சமாக தாயின் கண் முன்னே மகளை மானபங்கப்படுத்தி அவளது பிறப்புறுப்பில் குண்டு வைத்து வெடிக்கச்செய்தான். அந்த வலியால் இன்னும் துடித்துக்கொண்டிருக்கிறோம்’’என்று பேசினார்.

இவ்விழாவில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன் பேசுகையில்,
பூலித்தேவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். பிரபாகரன் மீண்டும் வருவார். இயக்கத்திற்கு தலைமையேற்று வழிநடத்துவார் என்றார்.

thanks to http://www.tamilwin.com/view.php?2a26QVl4b42X98se4b46IP5ce2bf1GU2cd3QipD2e0dVZLuSce03g2FZ0cd3tjoCd0

Saturday, August 28, 2010

தஞ்சை பெரிய கோவிலுக்குள் "போர்வெல்': ஐகோர்ட் தடை

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2010,23:13 IST

மதுரை : தஞ்சை பெரிய கோவிலுக்குள் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுப்பதற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது. தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புக் குழு தலைவர் முருகேசன் தாக்கல் செய்த பொது நல வழக்கு: 

தஞ்சை பெரிய கோவிலை, உலக புராதன சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது. இக்கோவிலை முதலாம் ராஜராஜ சோழன் கட்டினார். இங்கு எழுந்தருளியுள்ள பிரகதீஸ்வரர் சுவாமியை ஏராளமானோர் வழிபடுகின்றனர். கோவில் விமானம் 216 அடி உயரம் கொண்டது. இதை, பழமை வாய்ந்த வரலாற்றுச் சின்னமாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. கோவிலில் ஆயிரமாவது ஆண்டு விழா செப்., 25, 26ம் தேதிகளில் நடக்கவுள்ளது. இதற்காக பணிகள் நடந்து வருகின்றன.


கோவில் வளாகத்திற்குள் சுவாமி சன்னிதியிலிருந்து வெளியில் செல்லும் வழியில் ராஜகோபுரம் அருகே போர்வெல் அமைக்கப்படுகிறது. 400 அடி வரை போர்வெல் அமைக்கின்றனர். இதற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவில் களிமண் ஏரியாவில் அமைந்துள்ளது. போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்தால், அடித்தளம் பாதிக்கப்பட்டு, கோபுரத்தில் விரிசல் ஏற்படும்.
ஏற்கனவே காளஹஸ்தி கோவில் கோபுரம் இடித்து விழுந்துள்ளது. ஸ்ரீரங்கம் பெரிய கோவில், மதுரை மீனாட்சி கோவில் கோபுரங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு, கோபுரம் அருகே போர்வெல் அமைத்தது காரணம்.


தஞ்சை கோவிலுக்குள் போர்வெல் அமைக்கும் முன், அறிவியல் ரீதியாக ஆய்வு நடத்தவில்லை; நிபுணர் குழு அமைக்கப்படவில்லை. போர்வெல் அமைப்பதை நிறுத்தக் கோரி, முதல்வர் உட்பட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. போர்வெல் அமைக்கும் பணிக்கும், தண்ணீர் எடுக்கவும் தடை விதிக்க வேண்டும்; போர்வெல்லை மூட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் சார்பில் வக்கீல்கள் லஜபதிராய், அருணாச்சலம் ஆஜராயினர்.

நீதிபதிகள் முருகேசன், துரைசாமி கொண்ட பெஞ்ச், போர்வெல் அமைத்து தண்ணீர் எடுக்க இடைக்கால தடை விதித்தது. மனு குறித்து பதிலளிக்க தொல்லியல் துறை, இந்து அறநிலையத் துறை, தஞ்சை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது

thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=70953

Tuesday, August 24, 2010

தஞ்சை பெரிய கோவில் மீட்பு குழு --தீர்மானங்கள்

தஞ்சை பெரிய கோவில் மீட்பு குழு --தீர்மானங்கள்








நன்றி
தொடர்ந்து ஆதரவு தருக ..
தஞ்சை பெரிய கோவில் மீட்பு குழு -